யுத்தம் முடிவடைந்த பின்னர் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது?

government commission sri Lanka president commission
By Kalaimathy Jul 17, 2021 09:58 AM GMT
Report

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஸ்ரீலங்கா அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது அமர்வில் சாட்சியமளித்த சந்தர்ப்பத்தில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த விடயம் குறித்த கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது விசாரணை இந்த வார இறுதியில் கொழும்பில் இடம்பெற்றது. மனித உரிமை மீறல் ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதியரசருமான திலீப் நவாஸ் தலைமையில் இந்த அமர்வு நடைபெற்றது.

இதன்போது சாட்சியமளித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, யுத்தம் முடிவடைந்த பின்னர் பரணவிதாரண ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என பல ஆணைக்குழுக்கள் கடந்த கால அரசாங்கத்திலும், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்திலும் உருவாக்கப்ட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என இதுவரை தெரியாது எனவும், அதனையே இந்த ஆணைக்குழுவிடமும் வினவுவதாகவும், பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி பரணவிதாரண ஆணைக்குழுவின் விசாரணை 2015 இல் ஆரம்பிக்கப்பட்டு 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவைகள் கொண்ட அறிக்கை உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையின்படி ஒருசில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் நிலையில். அது இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆணைக்குழுக்களில் முதலில் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித வதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனவும், மனித உரிமை விடயத்தில் இந்த அரசாங்கம் முதலில் செய்ய வேண்டிய விடயங்கள் நிறையவே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசில் பதவி வகிக்கின்றவர்களில் ராஜபக்ச குடும்பத்தினர் 4 அல்லது 5 பேர் அமைச்சரவை அமைச்சர்களாக உள்ளதாகவும், இவர்களில் ஒருவருக்கேனும் தேசிய நல்லிணக்க புனர்வாழ்வு அமைச்சு வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு வழங்கப்பட்டிருக்குமாயின் எதிர்காலத்தில் தேசிய நல்லிணக்க இணக்கப்பாடு விடயத்தினை விரைவாக முன்கொண்டு செல்ல முடியும் என மக்கள் நம்புவார்கள் எனவும், கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்