தடை செய்யப்பட்ட அடிப்படைவாத அமைப்புக்கள்- பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
government
islam
sri Lanka
gazet
By Kalaimathy
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை செய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் பள்ளிவாசல்களில் நிர்வாக சபைகளில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பார்கள் எனில், அவர்களை அந்த பதவிகளில் இருந்து விலகுமாறு வஹ்ப் சபை அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற வஹ்ப் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
தேசிய தவ்ஹித் ஜமாத், சிலோன் தவ்ஹித் ஜமாத், அகில இலங்கை தவ்ஹித் ஜமாத், தேசிய தவ்ஹித் ஜமாத் உட்பட 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு அரசாங்கம் தடைவிதித்து, விசேட வர்த்தமானி அறிவித்தலை அண்மையில் வெளியிட்டிருந்தது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்