இது உகந்த நேரமல்ல! ஸ்ரீலங்கா அரசுக்கு இடித்துரைப்பு
srilanka
corona
colombo
port city
covi19
By S P Thas
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்த, இது சரியான நேரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்த, இது சரியான நேரம் இல்லை . இதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் கணிசமான உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த அரசாங்கம் தற்போதைய நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி மிகவும் சிந்திக்காமல் அதனை ஒதுக்கி வைத்து துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்