இலங்கை உட்பட 99 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சி
உலகத் தலைவர்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் பிரபலங்கள் எப்படி வரி புகலிடங்களைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதற்கான நிதி ரகசியங்களை மில்லியன் கணக்கில் கசிந்த ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
பண்டோரா பேப்பர்ஸ் என அழைக்கப்படும் நிறுவனங்களின் கோப்புகளில் இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள அரசாங்க அமைச்சர்கள், நீதிபதிகள், மேயர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற 300 க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் இரகசிய நிதி குறித்தும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோர்டான் மன்னர் இங்கிலாந்தின் 70 மில்லியன் யூரோ மற்றும் அமெரிக்கச் சொத்துக்களை ரகசியமாகக் குவித்ததை அந்தக் கசிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மொனோக்கோவில் இரகசிய சொத்துகளைக் கொண்டிருப்பதை இந்த கசிவு வெளிப்படுத்தியுள்ளது.
"பண்டோரா பேப்பர்ஸ்" விசாரணையில், தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள் -குறிப்பாக முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர், ஜோர்டான் மன்னர் மற்றும் கென்யாவின் ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா உட்பட - சக்தி வாய்ந்த கோடீஸ்வரர்கள், வரி புகலிடங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,