இலங்கையை முழுமையாக திறப்பதால் ஏற்படும் ஆபத்து! வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை
இலங்கையில் 75 வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாகத் திறப்பது அச்சுறுத்தலானது. நாட்டைத் திறந்துவிட்டு தடுப்பூசி ஏற்றலாம் எனக் கருதினால் மோசமான வைரஸ் பரவல் நிலை உருவாகும் என்று சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு திறக்கப்பட்டாலும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இன்னமும் நாடு சிவப்பு எச்சரிக்கையில் இருந்து விடுபடவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலத்திலும் மக்களின் செயற்பாடுகள் முழுமையாகத் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்ற பொதுவான விமர்சனம் உள்ளது.
அதேபோல், பொதுப் போக்குவரத்தை மிகக் கவனமாக கையாள வேண்டியுள்ளது. பஸ்களில், ரயில்களில் 50 வீதமான பொதுமக்களுக்கே இடமளிக்க வேண்டும். நாட்டில் தற்போதும் டெல்டா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை நீங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,