இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று! உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்
srilanka
covid19
corona
colombo
By S P Thas
இலங்கையில் தினசரி கொரோனா நோய்த்தொற்றுகள் விரைவாக உயர்வதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த பிரச்சினை இலங்கையை பொறுத்தவரையில் சவாலான அத்தியாயம் என உலக சுகாதார மையத்தின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ஒலிவியா நிவேரஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு மற்றும் முன்னிலைப் பணியாளர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கடும் பிரயத்தனத்தில் ஈடுப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தை பொறுத்தவரையில் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான உதவிகளை வழங்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்