தீ விபத்தில் சிக்கிய 3 இலங்கையர்கள்..! மாலைதீவில் சம்பவம்
மாலைத்தீவில் வாகன பழுதுபார்க்குமிடதில் பணிப்புரியும் மூன்று இலங்கையர்கள் தீ விபத்தொன்றில் சிக்கியுள்ளதாக மாலைத்தீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
மாலைதீவின் தலைநகரான மாலேயில் கடந்த பத்தாம் திகதி அதிகாலையில் ஏ.எஸ்.எம் கேரேஜ் இஸ்கந்தர் மாகு (ASM Garage Iskandhar Magu) என்ற வாகன பழுது பார்க்குமிடதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் இக் கட்டிடத்தின் தரை தளத்தில் தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு நடவடிக்கை

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மீட்பு பனியாளர்களின் உதவியுடன் இவர்கள் எவ்வித தீக்காயமும் இன்றி மீட்கப்பட்டள்ளதாகவும் பாதுகாப்பான இடத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட இலங்கையர்களை அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் நேரில் சென்று (11) பார்வையிட்டதுடன் பாதுகாப்பாக தங்குவதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இந்த மூன்று இலங்கை பிரஜைகளும் நல்ல ஆரோக்கியம் மற்றும் போதுமான
உணவு மற்றும் பிற அனைத்து வசதிகளும் அவர்களது நிறுவன உரிமையாளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.