காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை அச்சுறுத்தும் காணாமலாக்கப்பட்டோரைத் தேடும் அலுவலகம்!

letter sri Lanka missing persons santhiya eknaligoda
By Kalaimathy Sep 06, 2021 11:37 AM GMT
Report

காணாமலாக்கப்பட்டோரைத் தேடும் இலங்கையின் முதன்மையான அமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தனிப்பட்ட தகவல்களைக் கோருவதால் உறவுகள் அச்சமடைந்துள்ளனர்.

சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட விடயங்களை அலுவலகம் கோரியுள்ளதால் தாம் அச்சமடைந்ததாக சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும், காணாமல் போன தனது கணவருக்காக சுமார் 12 வருடங்களாக போராடி வருபவருமான சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் முறைப்பாடுகள் குறித்து மேலதிக விபரங்களைப் பெறுதல் என்ற தலைப்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி, காணாமல் போனோர் அலுவலகத்தின் தரவு முகாமைத்துவ பிரதானியான ஏ.என் நுவன் அனுப்பி வைத்த கடிதம் தனக்கு அதிர்ச்சியளித்ததாக சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், பல வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் அல்லது விசாரணைகள் பற்றிய எந்த புதுப்பிப்பும் இல்லாத நிலையில், அமைப்புக்கு தொடர்பில்லாத தனிப்பட்ட ஆவணங்களுக்கான உங்கள் வேண்டுகோள், நீதிக்கு பதிலாக வன்முறை மற்றும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபரான நான் உணர்கின்றேன் என  குறிப்பிட்டுள்ளார்.

2010 ஜனவரி 24ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன தனது கணவரும், ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொடவை கண்டறிய மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து காணாமல் போனோர் அலுவலகத்தின் தரவு முகாமைத்துவ பிரதானிக்கு மிக நீண்ட விளக்கமளித்துள்ள சந்தியா எக்னலிகொட, தம்முடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கடிதத்தில் அவரது சந்தேகங்களுக்கான நியாயமான காரணங்களையும் அவர் உள்ளடக்கியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கும் விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பிரகீத் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரணைகளில் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆணைக்குழு பாதிக்கப்பட்ட எனக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்காமல் அல்லது அழைப்பும் விடுக்காமல், நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல், வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தி ஒருதலைப்பட்சமாக செயற்படுகின்றது  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளை விடுவித்த ஆணைக்குழு, முறையான விசாரணையை நடத்தியதாகவும், பிரகீத் காணாமல் போனமை குறித்த உண்மையை வெளிக்கொண்டு வந்த அதிகாரிகளை பாராட்டுவதற்கு பதிலாக தண்டித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள சந்தியா எக்னெலிகொட, இந்த தீர்மானமானது, இலங்கை குடிமகளாக அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ”சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி நியாயமாக இருக்க வேண்டு" என்ற தனது அடிப்படை அரசியலமைப்பு உரிமையை மீறுவதாக அமைந்துள்ளாதாக குறிப்பிட்டுள்ளார்.

மீறல்களுக்கு தலைமை வகித்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தற்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவராக செயற்படுவதாகவும், இந்த அலுவலகத்தை ஒரு பக்கச்சார்பற்ற, சுயாதீனமான அமைப்பாக நம்பலாமா எனவும், அது பாதிக்கப்பட்டவருக்கு தேவையான உளவியல் மற்றும் சமூக ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா? எனவும் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தில் தரவு பிரதானியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

2016ஆம் ஆண்டு நிலைமாறு கால நீதி பொறிமுறையின் முதல் படியாக நிறுவப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்ட ஆணையாளரின் நியமனமும், தற்போதைய அதிகாரிகள் நியமனம் மற்றும் அமைப்பு முற்றிலும் வேறுபட்டுள்ளதோடு, அலுவலகத்தில் சுயாதீனத்தன்மை குறித்த நம்பகத்தன்மை சிதைந்துள்ளது.

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நிறுவனம் காணாமல்போனோர் குறித்த அலுவலகம் என்பதை நினைவு கூர்ந்த சந்தியா எக்னெலிகொட, ICRC மற்றும் UNWGEID ஆகிய நிறுவனங்களுடன் நேரடியாகக் கையாளாமல் கடிதங்களை கோருவது மறைமுக அழுத்தமாகவே பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல்போனமை குறித்த மேலதிக தகவல்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின் வழக்கு விசாரணைகளை அவதானிக்குமாறு சந்தியா எக்னெலிகொட காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார். காணாமல் போனவர்களின் அலுவலகம் காணாமல் போன குடும்பங்கள் அனுபவிக்கும் வலி மற்றும் அதிர்ச்சியை ஏற்றுக்கொள்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் / காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பொறுப்புக்களை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்,” என அவர் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் முன்னாள் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்த விடயம் கடிதத்தின் நிறைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி