வாய்த்தகராறால் ஏற்பட்ட விபரீதம்- தீவிர விசாரணையில் பொலிஸார்!
மஹியங்கனையில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு்ள்ளதாகத் தெரிவி்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மஹியங்கனை - மொரகெடிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபர், பலத்த காயங்களுடன் தம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், மொரகெட்டிய வேவெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரிடையேயான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது முற்றி, கைகலப்பாகமாறியதால், இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்யும் பொருட்டு மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.