சிறிலங்காவில் நீடிக்கும் நெருக்கடி! நாடாளுமன்ற அமர்விற்குச் சென்ற கோட்டாபய
srilanka
colombo
politics
parliament
gotabaya
By S P Thas
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றம் சென்றுள்ளார்.
இந்த நிலையில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன , இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், நாலக கொடஹேவா, காஞ்சன விஜேசேகர, அனுந்திக பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இசுரு தொடங்கொட ஆகியோர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்றனர்.
கோட்டாபய ராஜபக்ச சபைக்குள் பிரவேசித்த போது , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டனை 27/2 இன் கீழ் கேள்வியெழுப்பப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பதிலளித்தனர்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள உர நெருக்கடி நிலை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

