பசிலின் வரவு செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிடச் சென்ற கோட்டாபய!
basil
budget
parliament
gotabaya
sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்ற வரவு – செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ(Gotabaya Rajabaksha) நாடாளுமன்றம் சென்றுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றம் சென்றுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாட்டின் 76 ஆவது பாதீட்டை முன்வைத்து, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதீட்டு உரையை ஆரம்பித்துள்ளார்.
76ஆவது பாதீடான இது, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது பாதீடாகும்.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை சனிக்கிழமை ஆரம்பமாகி, 7 நாட்களுக்கு இடம்பெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.