இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!
                    
                police
            
                    
                promotion
            
                    
                sri Lanka
            
            
        
            
                
                By Kalaimathy
            
            
                
                
            
        
    சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களாக கடமையாற்றிய பெண்கள் மூவர், பிரதி கால்துறைமா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோரே பிரதி காவல்துறைமா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள்  உடன் அமுலாகும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில், பெண் காவல்துறை அதிகாரிகள் பிரதி காவல்துறைமா அதிபர்களாகத் தரமுயர்த்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        