பூஜ்ஜியமானது கையிருப்பு!! ரகசியத்தை உடைத்த லக்ஷ்மன் கிரியெல்ல
நல்லாட்சி அரசாங்கம் நாட்டை ஒப்படைத்த போது 7 ஆயிரத்து 799 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பில் இருந்ததாகவும், அது தற்பொழுது பூஜ்ஜியமாக குறைந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் விலை கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும், வாழ்க்கைச் செலவுக்குறைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்தது உள்ள நிலை எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சிறிது காலத்திலேயே எமது கையிருப்புக்கள் வீழ்ச்சியடைந்தன.
மக்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களான தண்ணீர், மின்சாரம், எரிவாயு, எரிபொருள் போன்றவற்றின் விலைகள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி உயர்ந்துள்ளன.
மக்களுக்கு சுதந்திரம் இல்லை, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் மருந்து இல்லை, அரசாங்கம் என்ன செய்கிறது என்று மக்கள் கேட்கின்றனர்.
உண்மையில் 2019 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் தான் இந்த நிலை உருவானது. ஏனெனில் தற்போதைய அரசாங்கம் முதல் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் 800 பில்லியன் ரூபா அரசாங்க வருமானத்தை இழந்துள்ளது” என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்