நெருக்கடியின் உச்சக்கட்டம்! இலங்கையில் கலகங்கள் வெடிக்கலாம் - பகிரங்க எச்சரிக்கை

srilanka colombo political ranil
By S P Thas Dec 28, 2021 12:04 PM GMT
Report

நாட்டின் கையிருப்பில் இருக்கும் டொலர் பற்றாக்குறையானது மிக மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது எனவும் இதன் மூலம் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையானது மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத இடத்திற்கு வந்துள்ளது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் டொலர் பற்றாக்குறையானது மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சுமையானது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத இடத்திற்கு வந்துள்ளது.

குறிப்பாக வர்த்தகங்கள் வீழ்ச்சியடைகின்றன. தொழில் வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன. நடுத்தர வகுப்பு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் நடுத் தெருவில் கைவிடப்பட்டுள்ளனர். இவற்றுக்கு உடனடியாக தீர்வு அவசியம்.

கோவிட் தொற்று நோய் நிலைமை காணப்பட்டாலும் உலகில் பல நாடுகள் 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றத்தை கண்டுள்ளன. நாமும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இதனால், அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று கடனுவியை பெற வேண்டிய கடமை இருக்கின்றது. இல்லையென்றால், அதற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்று யோசனையை முன்வைக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை. நாட்டு மக்கள் தற்போது ஆத்திரத்தில் இருக்கின்றனர். இதனை தவிர நாம் மேலும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதுதான் நாட்டில் ஏற்பட போகும் உணவு பற்றாக்குறை.

சிங்கள - தமிழ் புத்தாண்டு காலம் வரும் போது நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அனைத்து பிரதேசங்களில் கிடைக்கும் தகவல்கள் இம்முறை அறுவடையானது கடந்த முறையை விட 60 வீதம் குறைவு எனக் கூறுகின்றன. இப்படியான நிலைமை ஏற்பட்டால், நாம் எதிர்நோக்க வேண்டியுள்ள அரசியல் பின்னணி குறித்து சிந்தித்து பாருங்கள்.

ஆத்திரமடைந்துள்ள மக்கள் மத்தியில் கலகங்கள் வெடிக்கலாம். இது அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படியானால், இப்படியான நிலைமை ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் இதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் தற்போது கடனுக்கு எரிபொருள் மற்றும் உணவை பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நிறைவு செய்யுங்கள். இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட உள்ள உடன்படிக்கைகளை விரைந்து முடியுங்கள்.

இந்தியாவிடம் இருந்து உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளுங்கள். பொருட்கள் மற்றும் பணத்தை கடனுக்கு பெறுவதால், நாட்டின் அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. எனினும் தற்காலிக நிவாரணமாக கடனுக்கு உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளுங்கள். கடனுக்கு எரிபொருள் பெறும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே எதிர்வரும் ஜனவரி மாதம் அரசாங்கம் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025