சீனாவின் வளர்ச்சியால் இரண்டு நாடுகளுக்கு ஏற்பட்ட பொறாமை -ஆளும்கட்சிக்கு ஆதரவான தேரர் வெளியிட்ட தகவல்
உலகின் அடுத்த வல்லரசாக சீனா வளர்ந்து வருவதை பொறுக்க முடியாத அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு பொறாமை என ஆளும் கட்சிக்கு ஆதரவான மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே அந்த நாடுகள் கொழும்பு துறைமுக திட்டத்தை சீனாவுடன் இணைந்து முன்னெடுப்பதை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
போர்ட் சிட்டி என்பது சீனா மாத்திரம் முன்னெடுக்கும் திட்டம் அல்ல என அவர் சுட்டிக்காட்டினார். போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் இலங்கையின் கலாசாரம், பௌத்தம், ஐக்கியம் என்பவற்றுக்கு பாதிப்பு இல்லை என்றால் அதற்கு எதிர்ப்பு வௌியிடுவதில் அர்த்தம் இல்லை என மகாநாயக்க தேரர்கள் கூறியதாக அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்தை ஆணைக்குழுவாக மாற்றி அமைக்கும் திட்டம் சிறந்த ஒன்று எனவும் இந்த ஆணைக்குழுவிற்கு வௌிநாட்டு பிரஜைகள் நியமிக்கப்படும் விடயத்தில் மாற்றம் தேவை எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.