9 மாதங்களில் இலங்கைக்கு கிடைத்த பல பில்லியன் அமெரிக்க டொலர்கள்!
இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 9 மாத காலப்பகுதியில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த காலப் பகுதியில் 6,865.4 மில்லியன் (6.86 பில்லியன்) அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணம் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1,053.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணவனுப்பல்
கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்களே வெளிநாட்டுப் பணவனுப்பலாக பெறப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 734.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணவனுப்பல் நாட்டிற்கு கிடைத்துள்ளது.
இந்தநிலையில், கடந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களே பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |