இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா -50 நாட்களில் ஆயிரத்தை கடந்த மரணங்கள் தொற்று ஒரு இலட்சம்
corona
death
rise
By Jaso
இலங்கையில் அதிகரித்தச் செல்லும் கொரோனாவால் உயிரிழப்புக்களும் நாளாந்தம் உயர்வடைந்தே செல்கின்றன.
இந்த வகையில் சித்திரை புதுவருடத்தின் பின்னர் நேற்று முடிவடைந்த 50 நாட்களில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்கள்பதிவாகியுள்ளன.
ஏப்ரல் 14ம் திகதிவரை 604 கொவிட் மரணங்கள் பதிவாகி இருந்தது. எனினும் மே மாதம் 3ம் திகதிவரை 1608 கொவிட் மரணங்கள் பதிவாகயுள்ளன. அதன்படி 50 நாட்களில் 1004 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.
அத்துடன் ஏப்ரல் 14ம் திகதிவரை 95737 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மே 3ம் திகதிவரை 195844 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி 50 நாட்களில் 100107 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்