இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு!
2025 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து நிலைத்தன்மையையும் நிலையான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
அதன்படி, இந்த ஒன்பது மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (சுமார் 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 7 சதவீத அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வணிக ஏற்றுமதி
2025 செப்டெம்பரில் மட்டும், வணிக ஏற்றுமதி மற்றும் சேவைகள் ஏற்றுமதி ஆகிய இரண்டையும் உள்ளடக்கி மொத்த ஏற்றுமதி வருமானம் 1,469.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
இது 2024 செப்டம்பர் உடன் ஒப்பிடும்போது 12.33 சதவீத வளர்ச்சியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் செயற்படுத்தப்பட்ட உத்திகளின் செயல்திறனையும் நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 3 மணி நேரம் முன்
