யுத்த வடுக்களின் சாட்சியங்களாய் வலிகளை சுமந்து வாழும் குடும்பத்தின் நிலை!
ஒரு போரின் பயணம் வெற்றியை நோக்கியதாகதான் எப்போதும் நகரும், அது வெற்றியை தழுவி மணிமுடியை சூடினால் இழப்புக்கள் அத்தனையும் வெற்றிக்குரிய சின்னங்களாயும், மரியாதைக்குரிய பொக்கிஷங்களாயும் பேணப்படும்.
அதே போல் யுத்தத்தில் அவயவங்கள் இழக்கப்பட்டாலோ, காயங்கள் ஏற்பட்டாலோ அவை வீரத்தழும்புகள் என்று போற்றப்படும்.
மாறாக யுத்தம் தோல்வியினைக் கண்டால் அதன் பின்னரான வாழ்நாள் ஒவ்வொன்றுமே நரகமயமானது தான்.
மயான ஓலங்களும், காயங்களின் வழியே யுத்த வடுக்களும், பசியும், பட்டினியும் இவற்றோடு வறுமையும் சேர்ந்து வாழ்வை வாட்டி வதைக்கும்.
ஒவ்வொரு நாளையும் எண்ணி எண்ணி கழிப்பதும் உதவிக்கரம் நீட்ட நம் உறவுகள் வேண்டுமே என்ற ஏக்கமும் நம்மை சூழ்ந்தே காணப்படும்.
ஒற்றை வேளை உணவு கூட இங்கே கேள்விக்குறியாகிவிடும்.
நம் இனத்தின் விடுதலை கோரி 3 தசாப்தம் தொடர்ந்த பெரும் போரின் வடுக்கள் இங்கே படும் பாடு சொல்லொணாத்துயர் தான்.
யுத்தத்தில் பொட்டிழந்து, பெற்றெடுத்த மக்களையும் பறிகொடுத்துவிட்டு, பிறந்த ஓராண்டிலேயே உடலில் காயம் சுமந்து இன்று மனவளர்ச்சி குன்றி வளரும் பிள்ளையையும் தன் வாழ்வில் நாள்தோறும் சுமந்தவராய் இந்த போரின் விளைவுகளின் சாட்சியங்களாய் பூநகரியில் பள்ளிக்குடாவைச் சேர்ந்த 04 பிள்ளைகளின் தாயார் தனியே தானே தன் குடும்பத்தினை பார்த்து வருகிறார்.
வலிகள் சுமந்த இவர்களின் வாழ்க்கை, ஐபிசி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் மூலம் உங்கள் கண் முன்னே.
இவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் : +94212030600/ +94767776363 ஆகிய எண்களுக்கு தொடர்புகொண்டு உங்கள் உதவிகளை வழங்குங்கள்