இனம்தெரியாத நபர்களின் விசமச் செயல்-திருகோணமலை-கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள பாரிய அசௌகரியம்!
திருகோணமலை கொழும்பு பிரதான வீதியின் கந்தளாய் பகுதியில் அறுவடை செய்த வயல் நிலங்களுக்கு இனந்தெரியாதோரால் தீ மூட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக காணப்படுகின்றது. இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் பேராற்றுவெளி பகுதியிலுள்ள வயல் நிலங்களில் அறுவடைகாள் மேற்கொண்ட வயல்களிலேயே இவ்வாறு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பாரியபுகை மண்டலமாக காணப்படுவதோடு திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் பயணம் செய்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்தோடு அப்பகுதியில் வீடுகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகளை வைத்திருப்போரும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பாரிய புகையாக காணப்படுவதால் பேராற்றுவெளி பகுதியிலுள்ளோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
பிரதான வீதியில் வாகனத்தில் செல்லுவோர் தொடர்ச்சியாக ஒளிச் சமிக்கைகளை இட்டு செல்கின்றனர். எனவே அந்த தீயினை அணைக்குமாறு அப்பகுதியில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.



