ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கிடையிலான விசேட கலந்துரையாடல்...

Jaffna Sri Lanka Politician Sri Lanka
By Kajinthan Mar 25, 2026 12:09 AM GMT
Report

 இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை (24.03.2026) நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மின்வெட்டு குறித்த நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்!

மின்வெட்டு குறித்த நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்!

தீர்வு கோரிய மக்கள்

காணிப் பிரச்சினைகள் முக்கியமாகக் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஆளுநர்,

“கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாகப் பலரது காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கிடையிலான விசேட கலந்துரையாடல்... | Srilanka Vedhanayagam Jafna

தற்போது மக்களிடமும் காணி ஆவணங்கள் இல்லை, அரச திணைக்களங்களிடமும் அதற்கான பதிவுகள் இல்லை. இதனால் தமது காணிகளுக்கான உரித்துகளை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மக்கள் தொடர்ச்சியாகப் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் ஆளுநர் செயலகத்துக்கும் அதிகளவில் வருகை தருகின்றனர்.

எனவே, அவர்களின் காணிப் பிணக்குகளைத் துரிதமாகத் தீர்த்து, உரிய காணி உரித்துகளை வழங்க வேண்டியது எமது மிக முக்கிய தேவையாகும். இதற்காக அரசாங்கம் ஏற்கனவே 'ஹிமிகம' (உரிமை) திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது,' என தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதியம்

அத்துடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சிகளை மேம்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒற்றைச் சாளர முறைமையை உருவாக்குதல், காணி விடுவிப்பு மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான தொழில்நுட்ப ஆதரவைப் பெறுதல், மற்றும் பசுமைக் காலநிலை நிதி போன்ற சர்வதேச நிதியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஐ.நா.வின் ஒத்துழைப்புக்கள் மாகாணத்துக்கு அவசியம் என்பதையும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கிடையிலான விசேட கலந்துரையாடல்... | Srilanka Vedhanayagam Jafna

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர்,

“வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உணர்திறன்களையும் சவால்களையும் கௌரவ ஆளுநர் மிகவும் நுட்பமாகக் கையாளுவதைப் பாராட்டியுள்ளார்.

அண்மைய வெள்ளப் பேரிடரின்போது அரசாங்கம் மற்றும் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவைகளை அவர் விதந்துரைத்துள்ளனர்.

அரசாங்கத்தின் உதவித் திட்டங்களுக்கு சமாந்தரமாக, ஐ.நா. முகவர் அமைப்புகளான யுனிசெப் போன்றவை மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் குழுக்களை, குறிப்பாகத் தனித்து வாழும் தாய்மார், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலையகத் தமிழ் சமூகத்தினரை இலக்காகக் கொண்டு துரித நிவாரணங்களை வழங்கியமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய நிலைமைகள் குறித்துப் பேசிய அவர், இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கான சர்வதேச நன்கொடையாளர்களின் நேரடி நிதியுதவிகள் தற்போது பெருமளவில் சுருங்கியுள்ள யதார்த்தத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பசுமைக் காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேத நிதி, கடன் பரிமாற்றங்கள் மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய அபிவிருத்திப் பத்திரங்கள் போன்ற புதிய நிதியீட்டல் முறைகள் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு அதிகபட்ச உதவிகளை வழங்க ஐ.நா. தயாராகவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'கொழும்பில் வடக்கு மாகாணத்துக்கான ஒரு தூதராக ஐ.நா. தன்னை உணர்கின்றது' எனக் குறிப்பிட்ட அவர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் முதலீடுகளை வடக்கிற்கு ஈர்ப்பதற்குத் தொடர்ந்து குரல்கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக உள்ள கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

வினைத்திறனான ஒற்றைச் சாளர முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோழி இறைச்சி - முட்டை விலைகள் அதிகரிப்பு

கோழி இறைச்சி - முட்டை விலைகள் அதிகரிப்பு

தொழில்நுட்ப ஆலோசனைகள்

அதேவேளை, அரசாங்கம் மற்றும் மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் நிதிகளைத் துரிதமாகச் செலவிடுவதற்கும், கொள்முதல் நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் ஐ.நா. தயாராகவுள்ளதாகவும் கூறியுளள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கிடையிலான விசேட கலந்துரையாடல்... | Srilanka Vedhanayagam Jafna

ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்ட காணி முரண்பாடுகள், காணி விடுவிப்புச் செயன்முறைகள் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரின் உரைகளைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம்,

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்கள், தமது மாவட்டங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியனவற்றுடன் தொடர்புடையதாக மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல, கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும், தமது மாவட்டத்தில் நிலவும் பல்வேறுபட்ட காணிப் பிணக்குகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இறுதியாகக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண காணி ஆணையாளர்,

காணி ஆவணங்கள் 

மாகாணத்தில் சுமார் 2 இலட்சம் காணி ஆவணங்கள் கையாளப்பட வேண்டியுள்ளதைக் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியைக் கொண்டு, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இந்தப் பணியை நிறைவு செய்வதற்கு, சேவையிலீடுபடும் உத்தியோகத்தர்களுக்கு விசேட ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், மாவட்டச் செயலாளர்கள், மாகாணக் காணி ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026