பட்டினிச்சாவை நோக்கி நகரும் சிறிலங்கா! விரக்தியின் உச்சத்தில் மக்கள் (காணொளி)
நாடு பட்டினிச்சாவை நோக்கிச் செல்கின்ற நிலைமையில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நாட்டின் நலன் கருதி அவசர தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.
இல்லாது விடின் 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே நாடும் அரசும் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு அடுப்பு வெடிப்பு, எரிபொருட்களின் விலையேற்றம் kw;Wk; பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மரக்கறிகளின் விலை உயர்வு எனப் பலதரப்பட்ட பிரச்சினைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர் என்றும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,