முக்கிய கொலைவழக்குகள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை -எதிர்க்கட்சி வெளியிட்ட பகீர் தகவல்
நாட்டில் இடம்பெற்ற முக்கிய கொலைவழக்குகளை விசாரணை இன்றியே முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சி பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வௌியிடுகையில்,
“நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லசந்த விக்ரமதுங்க கொலை, வசிம் தாஜுதீன் கொலை, நடராஜா ரவிராஜ் கொலை, ஜோசப் பரராஜசிங்கம் கொலை, வெலிக்கடை சிறை கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் பலவற்றையே விசாரணை செய்யாது நீக்கிக் கொள்ளும் யோசனை ஒன்றை ஆளும் கட்சி நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.
அரசாங்கத்திலுள்ள பலரும், அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களும் பல வழக்குகளிலிருந்தும் விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்கம் பல செயற்பாடுகளையும் மறைமுகமாக செய்ய முற்படுகிறது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.