சிறிலங்கன் எயார்லைன்ஸின் விமானப் பற்றாக்குறைக்கு தீர்வு! பெல்ஜியம் உடன் கைகோர்க்கும் இலங்கை
பெல்ஜியம் எயார்லைன்ஸின் இரண்டு விமானங்கள் குத்தகை அடிப்படையில் சிறிலங்கன் எயார்லைன்ஸில் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கன் எயார்லைன்ஸில் தற்போது நிலவும் விமானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான இந்த நடவடிக்கை, பயணிகளுக்கான தரமான சேவையை உறுதிப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பற்றாக்குறைக்கு
சிறிலங்கன் எயார்லைன்ஸில் நிலவும் விமானப் பற்றாக்குறைக்கு தீர்வு காண அந்த நிறுவனம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, பெல்ஜியம் எயார்லைன்ஸின் இரண்டு விமானங்கள் சிறிலங்கன் எயார்லைன்ஸில் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், Fitz Airஇன் A.320 ரக விமானமும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தால் தற்காலிகமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பெல்ஜியம் எயார்லைன்ஸ்
இந்த நிலையில், ஏ-330-200 ஏர்பஸ் வகையைச் சேர்ந்த பெல்ஜியத்தின் விமானங்கள் பெல்ஜிய எயார்லைன் விமானிகளால் இயக்கப்படுகின்றன.
இந்த விமானங்களில் 22 வணிக வகுப்பு இருக்கைகளும், 240 பொருளாதார வகுப்பு இருக்கைகளும் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |