சிறிலங்கன் எயார்லைன்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு
affected
srilankan airlines
fuel crisis
By Jaso
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என விமான போக்குவரத்து மற்றும் முதலீட்டு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க(Chanaka.) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பை கைவசம் வைத்துள்ளது. கடந்த வாரம் எரிபொருள் வாங்குவதற்கு 32 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர் கையிருப்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடமும் உள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஒருபோதும் இடையூறு ஏற்படாத வகையில் தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்