வழமைக்கு திரும்பும் சிறிலங்கன் விமான சேவை
சிறிலங்கன் விமான சேவையின் விமானப் புறப்பாடுகள் மற்றும் வருகைகள் இன்றைய தினத்திலிருந்து வழமைக்குத் திரும்பும் என சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசியல் தலையீடுகள் காரணமாக விமானக் கொள்வனவு இரத்துச் செய்யப்பட்டமையினால் நிறுவனம் தற்போதைய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு விமான சேவையின் தொழிற்சங்கங்கள் இன்று(28) குறிப்பிட்டுள்ளன.
இலங்கை விமானங்களின் தாமதங்கள் மற்றும் சில விமானங்களின் ரத்துச் சம்பவங்கள் கடந்த காலப்பகுதியில் தொடர்ச்சியாக பதிவாகியிருந்ததோடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தது.
விமானங்கள் இரத்து
இந்நிலையில், நேற்றையதினம் மாத்திரம் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதுடன் கிட்டத்தட்ட 03 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன.
அதன் போது, இந்தியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இடங்களுக்கான 07விமானங்கள் நேற்றையதினம் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |