சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்
சிறிலங்கன் விமான சேவையை அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக நிர்வகிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சுற்றுலா விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “எங்கள் விமான நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும். கட்டுநாயக்க விமான நிலையத்தை நவீனப்படுத்த வந்த முதலீட்டாளர்கள் ஏன் அதனை விட்டுச் சென்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
தேசிய விமான சேவை
எங்கள் விஞ்ஞாபனத்தின் படி, தேசிய விமான சேவைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம், இப்போது சிறிலங்கன் விமான சேவை தொடர்பில் எங்களிடம் ஒரு கேள்வி உள்ளது.
அதனை அரசாங்கத்தில் வைத்து வளர்ச்சியடைய வைக்க முடியுமா?அரசாங்கமும் நிர்வாகத் திறன் கொண்ட நிறுவனமும் கூட்டாக நிர்வகிக்க முடியுமா? அல்லது, முழுவதுமாக விட்டுக்கொடுப்பதற்கான மூன்று விருப்பங்கள் எங்களிடம் உள்ளன.
எனினும், அரசு மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சியாக தேசிய விமான சேவையை நடத்துவதே எங்கள் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |