பாகிஸ்தானில் தீ வைத்து கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்: உலகம் முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலை

Death Pakistan Namal Rajapaksa Imran Khan SriLanka Dinesh Gunawarthana
By Chanakyan Dec 04, 2021 11:32 AM GMT
Report

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் இலங்கையில் மட்டுமல்ல உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் Sialkot நகரில் உள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்தவரே பிரியந்த குமார தியவடனடி (வயது - 40), இவர் அங்கிருந்த தொழில்சாலை ஊழியர்களினால் கடுமையாக தாக்கப்பட்ட பின்னர்  தீ வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இலங்கையின் கொழும்புச் சேர்ந்த இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் Sialkot நகரில் இருக்கும் Rajco தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

 கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் வசித்து வந்ததாகவும், இதற்கு முன்பு இவர் லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஆடைத் தொழில்சாலைகளில் பணிபயாற்றியுள்ளார்.

40 வயதான பிரியந்த குமார தியவடன, பாகிஸ்தானில் ஒரு குழுவினரின் மதத்தலைவரான Muhammad ibn Abdullahவின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை இழிவுபடுத்தியதன் காரணமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"சியால்கோட்டில் தொழில்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். நான் விசாரணைகளை மேற்பார்வையிட்டு வருகிறேன், எந்த தவறும் செய்யக்கூடாது, இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முழுக்கடுமையுடன் தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

இலங்கையில் சட்டம் - ஒழுங்கு நிலையைப் பராமரிப்பது கருதி பிரியந்த குமார தியவடன குறித்த தகவல்களை இலங்கை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை என்று இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கையில், 

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மிக வன்மையாக கண்டிப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவது வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பிலான முழுமையாக தகவலை பெற்றுக்கொள்வதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கின்றது.

மேலும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகனும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில், 

"பாகிஸ்தானில் தீவிரவாத கும்பலால் நிகழ்த்தப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை மூர்கத்தனமானது.

அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளதைப் பாராட்டும் அதே வேளையில், தீவிரவாத சக்திகள் சுதந்திரமாக உலாவ அனுமதித்தால், அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பது பற்றி நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி