இலங்கையர்களை உயிர் வாழ வைக்கும் பலாப்பழம்
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Mathu
இலங்கை மக்களின் முக்கிய உணவு ஆதாரமாக பலாப்பழம் மாறியுள்ளதுடன், லட்சக்கணக்கானவர்களின் உயிரையும் காத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்திக் குறிப்பின்படி, ஒரு காலத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்தப் பழம், இன்று இந்த மக்களின் முக்கிய உணவு ஆதாரமாக மாறியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கே பலாப்பழம் பெரும் உதவியாகவுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்திருக்கின்றனர். லட்சக்கணக்கான இலங்கையர்களை பலாப்பழம் உயிர் வாழ வைத்துள்ளதுடன், பட்டினியில் இருந்தும் காப்பாற்றி உள்ளது.
தற்போது ஒரு பலாப்பழம் 50 - 300 ரூபாய்க்கு கிடைக்கிறது.
விலைவாசி உயர்வால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாது திணறும் பலர் பலாப்பழத்தை தினசரி உண்பதாக தெரிவிக்கப்படுகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 27 நிமிடங்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
1 நாள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்