இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

sri lanka batticalo press meet srinesan
By Kalaimathy Sep 30, 2021 11:50 AM GMT
Report

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது எதுவும் செய்யவில்லை என்று இராஜாங்க அமைச்சர் அங்குமிங்குமாக பேசிக்கொண்டு திரிவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்(Srinesan) தெரிவித்துள்ளார்.

இன்று பகல் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னைப் பொறுத்தவரையில் கடந்த ஆட்சி காலத்திற்கும் தற்போது நடக்கின்ற ஆட்சி காலத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றது. கடந்த ஆட்சி காலத்தில் 90 இராணுவ முகாங்கள் மூடப்பட்டு மக்களுக்கு அந்த காணிகள் கையளிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமல்லாமல் 217 கைதிகள் இருந்தார்கள் 130 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எண்பத்தி ஏழு கைதிகள் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவர்கள் அல்லது நீதிமன்றம் ஊடாக விடுதலை செய்யப்பட்டார்கள் என்று பார்க்கும் போது ஏதோ ஒரு விதத்தில் 130 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆட்சிக்காலத்தில் தொல் பொருள் எனும் பெயரில் காணிகள் பிடிபடவில்லை மயிலத்தமடு மாதவனை, காவலியமடு பகுதிகளில் தற்போது உள்ள ஆளுநர் சிங்கள குடியேற்றங்களை குடி ஏற்றுவதில்  ஈடுபட்டு கொண்டு வருகின்றார்.

கடந்த ஆட்சி காலத்தில் இது நடைபெறவில்லை . அதற்கும் அப்பால் ஊடக சுதந்திரம் ஒழுங்காக பேணப்பட்டிருந்தது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல் ஊடகவியலாளர்கள் எவரையும் விமர்சிக்க கூடிய ஒரு நிலை காணப்பட்டது. ஊடகவியலாளர்களை மிரட்டுகிற தன்மைகள் காணப்படவில்லை அச்சுறுத்தல் செயற்பாடுகள் காணப்படவில்லை ஆனால் இப்போது ஊடகவியலாளர்கள் ஒருவகையில் அச்சுறுத்த படுகின்றார்கள்.

அண்மையில் கூட வெள்ளைப்பூடு மோசடி என்று வருகின்ற போது ஊடகவியலாளர்கள் சி.ஐ.டியினரால் விசாரிக்கப்பட்டனர். ஆகவே கடந்த ஆட்சியில் ஒரு ஜனநாயக சூழல் இருந்தது என்பதை நாங்கள் மறுதலிக்க முடியாது . இலங்கை குடிமகன் கடன் சுமையானது 750000 ஆகா உள்ளது.  ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது கடந்த காலத்தில் நன்றாக பார்க்க வேண்டும் ஒரு பேச்சுவார்த்தை மூலமாக ஒரு நகல் அரசியல் திட்டம் வரையப்பட்டது.

அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த செயல்படுகின்ற போதுதான் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்த்து சதித் திட்டம் ஒன்று ஏற்படுத்துகின்றார். அவர் பேசுகின்ற போது சொன்னார், நான் பேசாமல் சென்று இருந்தால் பிரபாகரன் ஆயுததால் தீர்க்க முடியாத பிரசனையயை சம்பந்தன் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்திருப்பார் என்று.

ஆகவே ஒரு இணக்கமான தீர்வு வரக்கூடாது என்பதற்காக இப்போது கதைக்கின்ற இராஜாங்க அமைச்சர் விளங்கிக் கொள்ள வேண்டும். தற்போது அதிகமாக பேசுகின்றார் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் போது அதிகமாக தமிழ் தேசியம் பற்றிப் பேசியவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாராவது கட்சி மாறி சென்றால் அவர்கள் துரோகிகளாக இருப்பார்கள் என்று தன்னுடைய வாய் மூலம் வாக்குமூலம் தந்த இவர் இப்போது ஒரு கதை பேசுகின்றார்.

கடந்த தேர்தல் நேர்மையாக நடந்து இருந்தால் யார் யார் தோற்று இருப்பார்கள் யார் வெற்றி பெற்று இருப்பார்கள் என்று தெரிந்திருக்கும் கடந்த தேர்தலில் மோசடிகள் மூலமாக வென்றவர்கள் இன்று மற்றவர்களை நிராகரிக்கப்பட்டவர்கள் என்று வியாக்கியானம் செய்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த ஆட்சியை விட தற்போது ஜனநாயக சூழல் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.

ராணுவ ஆட்சி நடைபெறுகின்ற ஒரு சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசுக்கு எதிராக யாராவது விமர்சனம் செய்தால் அவர்களை மிரட்டுகிற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் 90 இராணுவ முகாங்கள் மூடப்பட்டுள்ளன என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கூறியிருக்கின்றார்.

உங்களுக்கு தெரியும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டவர்களும் இந்த ஜிஎஸ்பி வரிச் சலுகைக்கான ஒரு நாடகத்தின் பெயரில்தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆகவே வாய்க்கு வந்த படியெல்லாம் நுனிப்புல் மேய்கின்ற அரசியலை செய்து கொண்டு  திட்டி தீர்க்க கூடாது. அது தான் அரசியல் என்றும் எல்லாவற்றையும் பேசிவிட்டு எனக்கு சுகர் ஏறிவிட்டது என்று மறுப்பு தெரிவிக்ககூடாது.

அண்மையில் சிறைச்சாலையில் மதுபோதையில் சென்ற லொகான் ரத்வத்த கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்ததும் இல்லாமல் தனது நண்பர்களின் சப்பாத்துக்களை நாக்கால் நக்க சொன்னதும் அல்லாமல் மட்டக்களப்புக்கு வந்திருக்கின்றார் அவர் வரவேற்கப்பட்டரா இல்லையா அது வேறு விடயம். அந்தக் கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உண்மையில் நாங்கள் ஒழுங்கான அரசியல் செய்பவர்களாக இருந்தால் இப்போது மட்டக்களப்புக்கு வர வேண்டாம் உங்கள் மத்தியில் தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பில் இருக்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்து இருக்கவேண்டும் அரசாங்கம் அனுப்புகின்றது தலைமை அனுப்புகின்றனர் எனறால் கலந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த தம்பிகள் எல்லாம் அவர்கள் நினைக்கின்ற அரசியல்தான் செய்ய வேண்டுமே ஒழிய இவர்களால் எதுவுமே செய்ய முடியாது எனவே இப்படியான கருத்துக்களை கூறி மக்களை பேய்காட்டகூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி