கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை- பகிரங்கமாகத் தெரிவித்த பிரமுகர்!

government development batticalo sri Lanka srinesan
By Kalaimathy Oct 19, 2021 06:06 AM GMT
Report

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையில் கடந்த நல்லாட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண சபையினால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி (I-Project) திட்டத்தினை தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உரிமை கோர முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்(G.Srinesan) தெரிவித்தார்.

மண்முனை மேற்கு பிரதேசத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி (I-Project) திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கான மகிழவட்டவான் -ஆயித்தியமலை, மகிழவட்டவான் - கரவெட்டி வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜா(S.Sanmugarajah) ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையில் இலங்கையில் உள்ள மாகாண சபைகளின் ஊடாக 2017இல் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது.

இருந்தபோதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவை ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள், செயலாளர்களுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளை அடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2018ம் ஆண்டில் ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்ட வேளை, அதனை தொடர்ந்து வந்த ஒக்டோபர் சதி புரட்சி, ஒப்பந்ததாரர் தெரிவுகளின் போது இடம்பெற்ற தாமதங்கள் காரணமாக இழுத்தடிக்கப்பட்டு தற்போது இவ் வீதிகளின் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட வேலைகளை, தாமே முன்மொழிந்து கொண்டு வந்ததாக தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உரிமை கோரி வருகின்றார்கள். இதனை உரிமை கோரும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை.

அத்துடன் பாரிய வேலைத்திட்டமாக, பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்வதென ஏற்கனவே திட்டமிடப்பட்டு அமுல்படுத்தலுக்காக இருந்தமையால் தான் நாங்கள் எமது தனிப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் மூலமாக பகுதி பகுதியாக இவ் வீதிகளை செப்பனிட முயற்சிக்கவில்லை.

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள் ஆறு வீதிகளை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்ட போதும் ஆயித்தியமலை - மகிழவெட்டுவான் வீதி, கரவெட்டி - மகிழவெட்டுவான் வீதி தவிர்ந்த ஏனைய பாவக்கொடிசேனை வீதி, புது மண்டபத்தடி வீதி, பன்சேனை வீதி மற்றும் சொறுவாமுனை வீதி ஆகிய நான்கு வீதிகளின் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அவைகளையும் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026