சிறீதரனைச் சுற்றி வளைக்கும் 7 கோடி ரூபாய் விவகாரம்...! தயாசிறிக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால்
அதிகாரத்தின் நிழலில் முன்னெடுக்கப்படும் குற்றச்சாட்டுக்களும், மக்கள் பிரதிநிதிகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் சமகால அரசியல் களத்தின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக மாறியுள்ளன.
இந்த நிலையில், 1,200 ஏக்கர் காணிகள் மற்றும் 7 கோடி ரூபாய் வைப்பிலிடப்பட்டதாகக் கூறப்படும் பாரிய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு, சிவஞானம் சிறீதரன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இந்தத் தகவல்கள் எந்த வங்கியில், யார் மூலம், எப்போது வைப்பிலிடப்பட்டன என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் சிறீதரன், இதனைத் தன்னை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் ஒரு முயற்சியாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருபுறம் ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுக்களையே தான் முன்வைப்பதாகத் தயாசிறி தரப்பு உறுதிபடக் கூறும் நிலையில், மறுபுறம் தான் அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயல்படாத காரணத்தினால் பழிவாங்கப்படுவதாகச் சிறீதரன் தரப்பு வாதிடுகின்றது.
தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான விவாதங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா அல்லது இதில் மறைந்திருக்கும் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்த பல கேள்விகள் தற்போதைய அரசியல் பரப்பில் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இரு மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த நேரடி மோதலின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை என்ன? இது எதிர்கால அரசியல் நகர்வுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது? என்பது உள்ளிட்ட பலதரப்பட்ட அண்மைய அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |