சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக தாய்லாந்து புறப்பட்ட மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி
Batticaloa
Thailand
Eastern Province
By Bavan
சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினர் நேற்று வெள்ளிக்கிழமை (24.10.2025)தாய்லாந்துக்கு பயணித்துள்ளனர்.
தாய்லாந்தில் ஒக்டோபர் 24 முதல் 27 வரை இலங்கை, பூட்டான், மாலைதீவு, தாய்லாந்து ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டவர்கள் கொண்டமைந்த சர்வதேச கூடைபந்தாட்ட போட்டி இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி
இந்த போட்டியில் இலங்கையில் இருந்து மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி அணியும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணியும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளன.

இதனடிப்படையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி அணியினர் தாய்லாந்துக்கு நேற்று இரவு விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்