பங்குத்தந்தை - விவசாயிகள் மடுவில் கடும் வாய்த்தர்க்கம்
மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் அமைந்துள்ள கோவில் மோட்டை விவசாயிகளுக்கும் பெரிய பண்டிவிரிச்சான் பங்குத் தந்தைக்கும் இடையில் நேற்று காலை வயல் காணியில் வைத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப்பகுதி விவசாயிகள் 40 வருடங்களுக்கு மேலாக குறித்த வயல் காணியில் விவசாயம் செய்து வருகின்ற போதும் அந்த பணியை தமக்கு வழங்குமாறு மடு ஆலய நிர்வாகம் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது.
இதன் விளைவாக தொடர்ச்சியாக விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்ற நிலையில் மாகாண காணி ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆளுநர் அவருடைய அனுமதியின் பேரில் விவசாயிகள் குறித்த வயல் காணியை உழவு செய்து பயிர் செய்ய தயாராகி வருகின்ற நிலையில் அத்துமீறி இரண்டு உழவு இயந்திரங்களில் பிரவேசித்த பங்குத்தந்தை மற்றும் மடு தேவாலயத்தில் பணியாற்றும் சிலரும் வருகைதந்து விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்டனர் .
இந்த நேரத்தில் குறித்த பங்குத் தந்தைக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பங்குத் தந்தை குறித்த வயல் காணியை விட்டு வெளியேறி சென்றிருந்தார். இதே போன்ற ஒரு நிகழ்வு சிறுபோக நெற்செய்கையின் போது போதும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.