பாடசாலைகள் ஆரம்பம் - கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் எதிர்கால சிறுவர்களுக்காக இந்த மாதம் முதல் முறையாக பாடசாலைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்தார்.
சிறுவர்களின் மகிழ்ச்சியானது பெற்றோர்கள் மற்றும் நாட்டின் மகிழ்ச்சியாகும் என்றும், அந்த மகத்தான முயற்சியை அவர்களுக்காக எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இன்று (1) நடைபெற்ற தேசிய சிறுவர் தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு உலக குழந்தைகள் தின விழா இன்று (1) காலை தேசிய தொலைக்காட்சி தலைமையகத்தில் "சிறுவர்கள் முதலில்" என்ற தலைப்பில் நடைபெற்றது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான சிறுவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறுவர்களின் திறமை மதிப்பீடு திட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவது உட்பட பல செயற்பாடுகள் நடைபெற்றன.


