இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka India
By Beulah Dec 12, 2023 01:28 PM GMT
Report

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில்நுட்ப அமைச்சரும் அதிபருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (12) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உக்கிரமடையும் போர்க்களம்: ஹமாஸுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

உக்கிரமடையும் போர்க்களம்: ஹமாஸுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அடிப்படை

“விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அடிப்படை இல்லாமல் எமக்கு முன்னேறிச் செல்ல முடியாது. நாட்டை முன்னேற்ற முடியாது.

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை | Steps New Technical University Help Of India

அதேபோன்று விவசாயம் மற்றும் நவீனப்படுத்தல் தொடர்பில் பேசுவதன் மூலம் கிடைக்கும் பயன்பாடுகளை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது என்பதே அதன் நோக்கமாகும். அதற்காக நாங்கள் நவீன தொழில்நுட்ப விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

எங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பே இருக்கிறது. அதன் மூலம் நாங்கள் முடியுமான பிரயோசனம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக இருக்கும் ஒரே தீர்வு தொழில்நுட்ப விவசாயத்துக்கு இணைப்பதாகும்.

அதனால் நாங்கள் வேளாண் தொழில்நுட்ப முறை தொடர்பில் நாங்கள் ஆராயச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ இருக்கிறோம். இலங்கையில் விவசாயத்தை நவீனமயமாக்க தனியார் துறைக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.

வலுசக்தி 

அதேபோன்று வலுசக்தி தொடர்பில் தெரிவிப்பதாக இருந்தால், நாங்கள் பல கிகாவோட்களை காற்றாலை மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளோம். அதேபோன்று 200 கிகாவோட் சூரிய சக்தி மின்சாரம் மூலம் பெற்றுக்கொள்வோம்.

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை | Steps New Technical University Help Of India

நாங்கள் இந்தியாவிடமிருந்து உதவி பெற்றுக்கொண்ட முறையும் இருக்கிறது. கிரீன் ஹைடிஜன் மற்றும் அமோனியா முறையாகும். இதில் ஹைடிஜன் முறையை கடல்சார் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறோம்.

இது போன்ற துறைகளில் வித்தியாசம் இருக்கிறது. ஜேர்மன் மற்றும் பிரான்ஸுடன் நாங்கள் கிரீன் தொழில்நுட்பம் தொடர்பாக கலந்துரையாடி இருக்கிறோம். மேலும் 4, 5 வருடங்கள் செல்லும்போது அதாவது 2035க்கு பின்னர் வரும் தொழில்நுட்பம் எமது நாட்டை தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த நாடாக அறிமுகமாகும் நிலை ஏற்படும்.

முன்னர் எங்களுக்கு பாடநெறியில் தொழில்நுட்பம் இருந்தது. கடந்த காலத்தில் எமது பொறியியல் தொழில்நுட்பத்துக்கு எந்தவொரு நாட்டுக்கும் சமமாக முடியாமல் இருந்தது. எகிப்து பிரமிட்களுக்கு சமமாக எமது நாட்டில் சைத்தியம் அமைக்கப்பட்டிருந்தது.

தண்ணீரை மேல்மாடிக்கு கொண்டுசெல்ல முடியுமான முறை அமைக்கப்பட்டிருந்தது. சிகிரியாவில் அது இருந்தது. அவர்கள் பட்டம் பெற்றவர்கள் அல்ல.

எனவே, நாங்கள் புதிய பல்கலைக்கழகங்களை அமைப்போம். இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

கொத்தலாவல பல்கலைக்கழகத்துக்கு குருணாகலை மற்றும் சீதாவக ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களையும் இணைப்போம்.” என்றார்.

நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் ஏற்படப்போகும் தாழமுக்கம்: இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் ஏற்படப்போகும் தாழமுக்கம்: இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024