புதிய வேலையைப் பெறுவதற்கான இரகசியம் - நுட்பமான முறையில் நேர்காணல்!
அவுஸ்திரேலிய நாட்டில் புதிய நிறுவன ஊழியர்களை தேர்வு செய்வதற்காக ஒரு நிறுவனம் புதிய முறையை கையாண்டுள்ளது.
குறித்த சம்பவம் அந்நாட்டில் உள்ள மென்பொருள் நிறுவன தலைவரான செரோ என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் உலக செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அது தொடர்பான இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார் .
தேநீர் மூலம் நடத்தை

மேலும் அவர் தெரிவிக்கையில், ''ஒருவருக்கு வழங்கப்படும் தேநீர் மூலம் தன்னுடைய நடத்தையை எவ்வாறு வெளிப்படுத்தகின்றார் என்பதை மிக எளிதாக கட்டறிந்து அவர்களுக்கு வேலை அளிப்பதே என்னுடைய நோக்கமாகும்.
அதாவது திறமையுள்ள ஆர்வம் உள்ள நபர் யாரேனும் நேர்காணலின் போது கண்டால் அவரை தேநீர் அருந்துவதற்காக அலுவலகத்தில் சமையல் அறைக்கு அழைத்து செல்வேன்.
இதன்பின் இருவரும் தேநீர் அருந்தி முடித்ததும் நேர்காணலுக்கு வந்திருந்த நபர் தன்னுடைய குவளையை தானே எடுத்துச் செல்ல விருப்பம் காட்டினாலோ அல்லது எடுத்துச் சென்றாலோ அவர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படியே வைத்து விட்டு சென்றால் வேலை கிடையாது.
இதனுடைய நோக்கம்

இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான முறையில் மூலம் பலரை நான் தெரிவு செய்தேன். என்னை பொறுத்தவரை ஒரு குவளையை தானே சுத்தம் செய்கின்றார் என்றால் அவர்கள் தன்னுடைய திறமைகளையும் அறிவாற்றலையும் நல்லதொரு அனுபவத்தையும் சிறப்பாக பெற்றிருப்பார்.
அதே சமயம் இது வெறுமனே குவளையை சுத்தம் செய்வது மட்டுமல்ல. ஒருவரின் குணாதிசியம் முதலீட்டவற்றை குறிப்பதாகும். குறித்த செயல் மூலம் ஒருவரின் மிக பணிவான நடத்தையை கண்டறிய முடியும்.
இது போன்ற சிறிய சிறிய விடயங்கள் தான் ஒரு மதிப்பை உருவாக்கும். மேலும் நேர்காணலுக்கு வரும் நபர்கள் தன்னுடைய குவளையை தாமே சுத்தம் செய்ய வேண்டும் என்பது இதனுடைய நோக்கம் அல்ல.

இதன் உண்மையான நோக்கமே ஒருவரால் தன்னுடைய வேலையை தானே செய்ய முடியுமா? அந்த அளவிற்கு அவர் தயாராக உள்ளாரா என அறிவது தான் எனது நோக்கம்.''என தெரிவித்தார்.