துப்பாக்கி,வாள் உட்பட ஆயுதங்களுடன் மூவர் கைது
STF
Colombo
Sri Lanka Police Investigation
By Sumithiran
கொழும்பு மருதானையில் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்கள் அடங்கிய மகசீன் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூவரை விசேட அதிரடிப்படை கைது செய்தது.
இந்த ஆயுதங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின்போது பயன்படுத்தப்படுவதற்கானவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டின் கூரையில் சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
யுக்திய நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தச் சோதனையின் போது, வீட்டின் கூரையில் சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள், குத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதம் என்பவற்றையும் விசேட அதிரடிப்படை கைப்பற்றியுள்ளது.
மருதானை காவல்துறையினரிடம்
மருதானையை வசிப்பிடமாகக் கொண்ட 18, 34 மற்றும் 47 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மருதானை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி