தொடருந்தில் மோதிய ஜீப் வண்டி: 4 அதிரடிப்படையினர் படுகாயம் - இருவர் கவலைக்கிடம்!
Matara
Sri Lanka
Accident
By Shalini Balachandran
மாத்தறையில் விபத்தில் சிக்கி நான்கு விசேட அதிரடிப்படையினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிகம, மிடிகம பகுதியிலுள்ள தொடருந்து கடவையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த விசேட அதிரடிப்படையினர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தொடருந்துடன் குறித்த ஜீப் வண்டி மோதி இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நால்வரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிடிகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி