விமர்சிப்பதை உடன் நிறுத்துங்கள் - கடும் தொனியில் உத்தரவிட்ட கோட்டாபய
அரசுக்குள் முரண்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை உள்ளேயே தீர்த்துக்கொள்ளுங்கள் - வெளியில் விமர்சிப்பதே உடனடியாக நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ( Gotabaya Rajapaksa).
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த கண்டிப்பான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
. அரசதலைவரது செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம், விவசாயிகளின் உரம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை அரசுக்குள் சில தரப்பினரிடையே நிலவும் கருத்து மோதல்கள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது, ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் அது தொடர்பில் வெளியில் விமர்சனங்களை முன்வைக்காது, உள்ளேயே அவற்றைத் தீர்த்துக் கொண்டு ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என அரசதலைவர் கோட்டாபய வலியுறுத்தினார் என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன (S.M. Santhirasena) ஊடகங்களிடம் தெரிவித்தார்.