அவுஸ்திரேலிய வீரர்களை தூற்றுவதை நிறுத்துங்கள் : ஹர்பஜன் சிங்
அவுஸ்திரேலிய வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தூற்றுவதை உடன் நிறுத்துமாறு இந்திய ரசிகர்களிடம் ஹர்பஜன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உலககிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி வென்று கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்திய ரசிகர்களின் தூற்றுதல்
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
Reports of trolling of family members of Australian cricket players is completely in bad taste. We played well but lost the final to better cricket by the Aussies. That's it. Why troll the players and their families? Requesting all cricket fans to stop such behaviour. Sanity and…
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 21, 2023
நல்லறிவும் கண்ணியமும் முக்கியமானது
இது குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், நல்லறிவும் கண்ணியமும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |