உடன் நிறுத்துங்கள்! யாழில் மறியல் போராட்டம்
Protest
Jaffna
By Vasanth
யாழ். மாவட்டச் செயலக நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.