ரஷ்ய சித்திரவதைக் கூடத்தில் இலங்கையர்கள் மீட்பு! தமிழர்களும் உள்ளனரா..!
சித்திரவதைக் கூடம் ஒன்றில் இலங்கை மாணவர்கள் மீட்பு
அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் தமது அறிக்கைகள் மூலம் சிறிலங்காவை மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என, உள்ளூரில் ராஜபக்ச அதிகார மையத்தரப்பும், ஐ.நா மனித உரிமை பேரவையில் ரஷ்யா, சீனா உட்பட்ட கடும் கடும்போக்கு நாடுகளும் செய்திகளை விடுத்துக் கொண்டாலும், இலங்கையரை மையப்படுத்தி ரஷ்யா செய்த குரூரமான செய்கை ஒன்றின் மறுபக்கத்தை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தற்போது அம்பலப்படுத்தி இருக்கிறார்.
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கார்கிப் நகரில் ரஷ்ய படையினரின் சித்திரவதைக் கூடம் ஒன்றில் இருந்து ஏழு இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதான அதிர்ச்சியூட்டும் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதல் அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் Kupyansk எனும் மருத்துவக் கல்லூரியில் உயிரியல் மருத்துவத் துறையினை கற்றுக் கொண்டிருந்தவர்கள் எனவும், அவர்கள் கடந்த சில மாதங்களாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது.