உக்ரைன் ஓர்ம தாக்குதல்! அலறும் ரஷ்ய துருப்புகள் - ஆபத்தாக மாறும் புடினின் கோபம்
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு
உக்ரைன் கள முனைகளிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற காட்சிகள் உக்ரைனின் - ரஷ்யாவின் எதிர்காலத்தை மாத்திரம் அல்ல, ஒட்டுமொத்த பூமிப்பந்தின் எதிர்காலத்தையே மாற்றிவிடும் என்று அச்சப்பட வைக்கிறது.
உக்ரைன் படைகளின் தாக்குதல்களினால் பதறி, அலறும் ரஷ்ய படை வீரர்கள் கைப்பற்றிய பிரதேசங்களை கைவிட்டுவிட்டு தப்பி ஓடும் காட்சிகளும் வெளிவந்திருக்கின்றன.
ரஷ்ய தரப்பில் 70 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் வரையிலான படை வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டதான செய்திகள் உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
ஓரிரு வாரங்களுக்குள் முடித்து விடலாம் என்று திட்டமிட்டு, சிறப்பு நடவடிக்கை என்று ஆரம்பிக்கப்பட்ட உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் ஏழு மாதங்கள் கடந்தும் தொடர்ந்து கொண்டிருப்பது என்பது, எதிர்வரும் காலங்களில் கள நிலவரங்கள் மேலும் கொடூரமாக மாறப்போகின்றது என்கின்ற யதார்த்தத்தை கட்டியம் கூறுவதாகவே இருக்கின்றது.
புடினின் காய் நகர்த்தல்கள் எப்படி இருக்கப் போகின்றன?
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் காய் நகர்த்தல்கள் எப்படி இருக்கப் போகின்றன? ரஷ்யப் படைகளின் பதிலடி எப்படி அமையப் போகின்றது என்பதை ஆராய்வதற்கு முன், கடந்த ஏழு மாதங்களாக ரஷ்யா போன்ற ஒரு உலக வல்லரசின் படைகளுடன் - ஒரு சிறிய தேசத்தின் வீரர்களால் எப்படி போரிட முடிகிறது என்று பார்ப்பது அவசியம்.
பிரம்மாண்ட ரஷ்யப் படைகளுடன் சண்டையிட்டு அவர்களை தடுத்து நிறுத்தி வருவது மாத்திரமல்ல, அவர்களை பல சந்தர்ப்பங்களில் புறமுதுகிட்டு ஓட வைத்திருக்கிறது உக்ரைன் படைகள்.
இவ்வாறான அதிசயங்களை உக்ரைன் படைகளால் எவ்வாறு செய்ய முடிகிறது? உண்மையில் கள முனைகளில் நடப்பது தான் என்ன? இது வரை நடந்த போரியல் தந்திரோபாயங்கள் எப்படி அமைந்தன, ஆயுத தளபாட வழங்கல்கள் எப்படி நடக்கின்றன, இதன் பின்னணியில் இருக்கும் நாடுகள் எவை?