இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி பண்ணை!
நுவரெலியாவில் (Nuwara Eliya) உள்ள நான்கு இடங்களை அடிப்படையாக கொண்டு ஸ்ட்ராபெரி பயிரிடுவதற்கான இலங்கையின் (Sri Lanka) முதல் சாகுபடி மாதிரிக் கிராமத்தை நிறுவ கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் (Mahinda Amaraweera) பணிப்புரையின் பேரில் இந்த மாதிரி பயிர்ச்செய்கை கிராமம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒவ்வொரு பழம் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்ய ரூபா 20 மில்லியன் செலவில் ஒரு மாதிரி கிராமம் நிறுவப்பட்டுள்ளதுடன் அதன்படி 50 விவசாயிகள் மூலம் 42 பசுமைக்குடில்களில் இந்த ஸ்ட்ராபெர்ரி சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.
பயிர்ச்செய்கை
இந்த ஸ்ட்ராபெரி பயிர்ச்செய்கையில் அவுஸ்திரேலியாவில் (Australia) இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்ட்ராபெரி செடிகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பான வீடுகளில் நடவு செய்யும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதுடன் இந்த வருடத்தில் இதற்காக 320 மில்லியன் ரூபா கமநல அபிவிருத்தி திணைக்களம் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |