சுற்றுலாப் பயணிகளிடம் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை
Sri Lanka Tourism
Tourism
Tourist Visa
By Laksi
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து மோசடிகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பயணிகளிடம் மோசடி செய்யும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளிடம் அதிகளவான கட்டணங்கள் அறவிடும் ஆட்டோ சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவில் உடையில் காவல்துறையினர்
மோசடிகளில் ஈடுபடும் நபர்களை இனங்காண்பதற்காக சிவில் உடையில் காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் பகுதிகளில் உள்ள காவல்துறை நிலையங்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 20 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்