படுதோல்வியில் முடிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் புதிய முயற்சி!.. (காணொளி)

Agriculture SriLanka Valaichchenai Urea Nano Nitrogen
By Chanakyan Nov 21, 2021 09:47 AM GMT
Report

வாழைச்சேனை கமநல சேவை நிலையத்திற்குட்டபட்ட விவசாய செய்கை வேளான்மைக்கு இந்தியாவிலிருந்து அரசாங்கம் இறக்குமதி செய்த நஞ்சற்ற நனோ நைதரசன் திரவப்பசளையை தெளித்த நிலையில் இதுவரை பத்து வீதம் கூட எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரச தலைவரின்  சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் மூலம் நஞ்சு தன்மையற்ற நாடு எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விழிப்பூட்டல் வேலைத்திட்டம் நாடுபூராவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு யூரியா இரசாயன உரத்திற்கு பதிலாக இந்தியாவிலிருந்து அரசாங்கம் இறக்குமதி செய்த நஞ்சற்ற நனோ நைதரசன் திரவப்பசளையை அறிமுகப்படுத்தல் மற்றும் பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது விவசாய இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வருகின்றது.

வாழைச்சேனை அடம்படிவட்டவான் கண்டத்திலுள்ள வயற்காணி ஒன்றினுள் நனோ நைதரசன் திரவப்பசளை எவ்வாறு விசிற வேண்டும் என்பது தொடர்பான செய்முறை பிரயோக பயிற்சி ஒன்றும் செய்து காட்டப்பட்ட நிலையில் எட்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரையில் நனோ நைதரசன் திரவப்பசளை தெளிக்கப்பட்ட வேளான்மையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களால் தெளிக்கப்பட்ட வேளான்மையில் எந்தவித மாற்றமும் ஏற்படாத வகையில் ஏனைய விவசாயிகள் நாங்கள் எவ்வாறு இதனை பெற்றுக் கொண்டு எங்களது வயல் நிலங்களுக்கு பயன்படுத்துவது.

நனோ நைதரசன் திரவப்பசளையை அரசாங்கம் இலவசமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நாங்கள் இதனை பெற்றுக் கொள்வதா இல்லை என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே நனோ நைதரசன் திரவப்பசளை தெளிக்கப்பட்ட வேளான்மையில் எந்தவித மாற்றமும் ஏற்படாத வகையில் நனோ நைதரசன் திரவப்பசளையை விவசாயகள் பெற்றுக் கொள்வதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.

வாழைச்சேனை கமநல சேவை நிலையத்திற்குட்டபட்ட இருபத்தைந்து விவசாய கண்டத்தில் 21350 ஏக்கர் பெரும்போக விவசாய செய்கையை 4850 விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு இடம்பெற்றால் விவசாயிகள் நிலைமை கேள்விக்குறியாகவே காணப்படும்.

அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பி நாங்கள் விவசாய செய்கையில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் மேற்கொண்டோம்.

ஆனால் எமக்கு வழங்கப்பட்ட நனோ நைதரசன் திரவப்பசளையில் எந்தவித பயனும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. எனவே விவசாய செய்கையை திறம்பட மேற்கொள்ள அரசாங்கம் எங்களுக்கு யூரியா உரத்தினை வழங்க முன்வருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026