நெடுந்தீவு மக்களின் போராட்டம் அவர்களில் இறுதி அஸ்திரம்! டக்லஸ் சுட்டிக்காட்டு

Sri Lankan Tamils Jaffna Douglas Devananda
By Kajinthan Apr 25, 2026 08:41 PM GMT
Report

தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாத நிலையில் அல்லது அவ்வாறான ஏதுநிலை உருவாக்கலில் ஏற்பட்ட இயலாமையால் தான் நெடுந்தீவு மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது அவர்களில் இறுதி அஸ்திரமாகவே இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் நெடுந்தீவு மக்கள் தமக்கான தேவைகளை பெற்றுக்கொள்ள குறிப்பாக தொடர்பு கொண்டு தமக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள் பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாதபடியினால் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று நடத்தியிருந்தார்கள்.

மத்திய கிழக்கின் நிலை விவாதம்! ஓமானுக்கு விரைந்த அராக்சி

மத்திய கிழக்கின் நிலை விவாதம்! ஓமானுக்கு விரைந்த அராக்சி

அமைதியான வாழ்வியல்

இது அவர்களின் ஜனநாயக உரிமையும்கூட. 90 களின் ஆரம்பத்தில் தீவகப் பகுதிகுள் அரச படையினரால் விடுவிக்கப்பட்ட பின்னர் அன்றைய அரசு சக தமிழ் கட்சிகளுக்கு மக்கள் பணிகளில் ஈடுபட வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

நெடுந்தீவு மக்களின் போராட்டம் அவர்களில் இறுதி அஸ்திரம்! டக்லஸ் சுட்டிக்காட்டு | Struggle Of The People Of Neduntheevu

ஆனால் அன்று எந்த கட்சிகளும் அதற்கு முன்வரவில்லை. அதன் பின்னரே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று நாம் அங்கு சென்றிருந்தோம்.

அப்போது அங்கு வாழ்ந்த மக்கள் எதிர்கொண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு எமக்கு இருந்தது. அவற்றை அனைத்த வழிகளிலும் செய்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பான அமைதியான வாழ்வியலை ஏற்படுத்திக் கொடுத்திருந்திருக்கின்றோம்.

குறிப்பாக நெடுந்தீவை சேர்ந்த மக்கள் தமது மூத்த பிரதிநிதிகளுடன் எம்மை சந்தித்திருந்தார்கள். இதன்போது தாம் பட்டினியில் எல்லையில் இருக்கின்றோம் என்றும் தமது வாழ்க்கையை பாதுகாத்து தருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

போர் நிறுத்தம் குறித்த தனது நிலைப்பாடு : பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக தெரிவித்தது ஈரான்

போர் நிறுத்தம் குறித்த தனது நிலைப்பாடு : பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக தெரிவித்தது ஈரான்

நெடுந்தீவு மக்கள்

அவர்களின் அழைப்பின் பேரில்தான் நாம் நெடுந்தீவு சென்றிருந்தோம். இதேநேரம் நாம் செல்லும்போது பாதுகாப்பு தரப்பினர் எம்முடன் வந்திருக்கவில்லை. நாம் தனியாகச் சென்றுதான் அந்த மக்களின் துயரங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருந்தோம்.

இதே நேரம் படைத்தரப்போ ஏனைய தரப்பினரோ அங்கு சென்றிருந்தால் தமக்கு எதிரான தரப்பினரை பழிவாங்கியிருந்திருக்கலாம். இதனூடாக உயிர் இழப்புகளும் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் எனது தலைமையில் எமது கட்சி உறுப்பினர்கள் அங்கு சென்றிருந்தமையால் எந்த ஒரு உயிரிழப்போ பழிவாங்கல்களோ ஏற்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக நெடுந்தீவு மக்கள் தமது எந்த பிரச்சினையானாலும் சரி குறிப்பாக காச்சல் வந்தால் கூட அதற்கான தீர்வைபெற எமக்கே தொடர்புகளை மேற்கொள்வார்கள்.

ஆனால் சமீப காலமாக குறிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அந்த மக்களுக்கு யாருடனும் தொடர்புகொண்டு தமக்கான தீர்வுகளை பெற அல்லது சூழ்நலையை ஏற்படுத்திக்கொள்ள இயலாமையால் பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாதபடியினால் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று நடத்தியிருந்தார்கள்” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026