தங்காலையில் விபத்தில் சிக்கிய மாணவன் உயிரிழப்பு!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Accident
Death
By Nithusan
தங்காலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தங்காலை நகரில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு முன்பாக இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் தங்காலை, ஹேனகடுவ, பன்னவாச மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட கொடிதுவக்கு ஆராச்சிகே சித்துல் சமூதய என்ற, வீரகட்டிய நடுநிலைப் பாடசாலையில் உயர் வகுப்பில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை

குறித்த மாணவன் தங்காலை நகருக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்காலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி