பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவன் உயிரிழப்பு
சாரதியின் தூக்க கலக்கத்தால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவன் பலியான துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பல்லேபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஊருபொக்க பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இன்று (15) அதிகாலை பல்லேபெத்த களுவரகஹா வளைவுக்கு அருகில் யாத்திரிகர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் தூக்கம் வாய்க்காலில் வீழ்ந்த பேருந்து

சாரதி தூங்கியதன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது பேருந்தின் இயந்திரப் பெட்டியில் அமர்ந்திருந்த மாணவன் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த பாடசாலை மாணவன் பல்லேபெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.